யாழ். மண்டைத்தீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நீலாவதிப்பிள்ளை சுப்பையா அவர்கள் 23-11-2021 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
தேவராணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
நடராஜா அவர்களின் அன்பு மைத்துனியும்,
வினீத்தா, சிந்துஜா, பானுஜா, முருகதீபன் ஆகியோரின் ஆருயிர் பெரிய தாயாரும்,
பிரபாகரன், தேவபாலன், ஸ்ரீதரன், மகுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷான், லஷான், ஜொஷான், தேனுஜன், தெஸ்வின், திவ்யன், சேயோன், லியாம், லூக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை குமாரவேலு, கமலம் திருஞானசம்பந்தபிள்ளை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.