யாழ். சுன்னாகம் ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கொழும்பு, Nigeria, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராமலிங்கம் கருணாஹரலிங்கம் அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஶ்ரீ வேலுப்பிள்ளை ராமலிங்கம், ஶ்ரீமதி அம்மணி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஶ்ரீ நவரத்தினம், ஶ்ரீமதி கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஶ்ரீமதி அம்பிகாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை- புனித தோமஸ் கல்லூரி, கொழும்பு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற ஶ்ரீ சுந்தரலிங்கம், ஶ்ரீமதி பத்மாதேவி தேவராஜன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஶ்ரீமதி லலிதாதேவி செல்வரத்தினம், ஶ்ரீமதி தணிகாதேவி சோமசுந்தரம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஶ்ரீ சடாக்ஷரலிங்கம், ஶ்ரீமதி மஹாலக்ஷ்மிதேவி அருளானந்தம், ஶ்ரீமதி தயாபரதேவி கணநாதலிங்கம் மற்றும் ஶ்ரீ கெங்காதரலிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஶ்ரீமதி ரமணிதேவி குகநேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஶ்ரீமதி இந்திராணி சுந்தரலிங்கம், ஶ்ரீ தேவராஜன் மற்றும் ஶ்ரீ செல்வரத்தினம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஶ்ரீ சோமசுந்தரம், ஶ்ரீமதி செந்தாமரைசெல்வி சடாக்ஷரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஶ்ரீ அருளானந்தம், ஶ்ரீ கணநாதலிங்கம்(இலங்கை), ஶ்ரீமதி புஷ்பராணி கெங்காதரலிங்கம்(அவுஸ்திரேலியா), ஶ்ரீ குகநேசன்(அவுஸ்திரேலியா), ஶ்ரீமதி சுலோக்ஷனாதேவி பரம்சோதி(கனடா), ஶ்ரீ மனோஹரன்(இலங்கை), காலஞ்சென்ற ஶ்ரீமதி இந்திராதேவி ஏகாம்பரம், ஶ்ரீமதி செண்பகாதேவி குகப்பெருமாள்(கனடா), ஶ்ரீ கர்ணாஹரன்(கனடா), காலஞ்சென்ற ஶ்ரீ ரட்ணாஹரன், ஶ்ரீ விஜயஹரன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான ஶ்ரீ பரம்சோதி, ஶ்ரீ ஏகாம்பரம், ஶ்ரீ குகப்பெருமாள் மற்றும் ஶ்ரீமதி லலிதா நவரத்தினம்(கனடா), ஶ்ரீமதி சகுந்தலாதேவி விஜயஹரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.