யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜனார்த்தனி இராஜேந்திரா அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகள், பரராஜசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
இராஜேந்திரா கமலாவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
தர்சினி, மகிந்தினி, நிலானி, கேஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலமுரளி, அஸ்வதன், உமாசந்திரன், ஹரிகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற தவனேஸ்வரி, சரஸ்வதிதேவி, ஜெயபாலசிங்கம்- பத்மினி, வேலாயுதம்- சூரியகுமாரி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
முகிலன், அபிரன், அஷ்னி, வர்ஷா, விபிஷா, நிகிலன், தீரன், ஷிவானி ஆகியோரின் சிறிய தாயாரும்,
குருசாமி- றாஜேஸ்வரி, நாகேந்திரா- றாஜேஸ்வரி, சண்முகராசா- யோகம்மா, தர்மராசா, தேவமலர்- காலஞ்சென்ற விநாயகமூர்த்தி. சறோஜினிதேவி- காலஞ்சென்ற சண்முகநாதன், நிர்மலாதேவி- தர்மரட்ணம், சகுந்தலாதேவி- கருணாகரன் ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.