யாழ். வேலணை வடக்கு சங்குதறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சதாசிவம் அவர்கள் 28-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசதீசன்(பிரான்ஸ்), செந்தில்குமரன்(பிரான்ஸ்), ஜனார்த்தன்(பிரான்ஸ்), ஜீவிதா(இந்தியா), நிசாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணாநந்தி(பிரான்ஸ்), கஜமுகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆகிசன், அஸ்விகா, அபிக்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அன்னபூரணி(பிரான்ஸ்), கோபாலபிள்ளை(இலங்கை), விஜயலட்சுமி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தையா, பகீரதி(இலங்கை), நாவேந்தன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராஜலிங்கம், கணேசலிங்கம், தேவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராசாம்பாள்(இலங்கை), லீலாவதி(கனடா), சசிமாலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணபாலசிங்கம், விஜயலட்சுமி(ஜேர்மனி), ஆத்மசரண்(பிரான்ஸ்), மஞ்சுளா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
சியாமளா, மஞ்சுளா, காலஞ்சென்ற சுபாஸ்கரன், சுபாஜினி, காலஞ்சென்ற குகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
உதயராணி, உதயகுமார், உதயமாலா, உதயமதி, உதயமலர், உதயமாலினி, உதயமாலதி, உதயசிவா, மயூகரன், நிசாந்தன், ரவீந்திரன், ரஞ்சனா, கஜானனன், கஜானனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.