யாழ். தெல்லிப்பழை மயிலிட்டி தெற்கு கட்டுவன் தண்ணீர்தாழ்வைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தினை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிகாமணி சரஸ்வதி அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிகாமணி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வல்லிபுரம்(யாழ்ப்பாணம்), வசந்தாதேவி(நியூசிலாந்து), பரராஜசிங்கம்(யாழ்ப்பாணம்), சின்னமணி(சுவிஸ்), சின்னமலர்(ஜேர்மனி), பாலசிங்கம்(ஜேர்மனி), சாந்தினி(ஜேர்மனி), சாந்தகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உஷா(லண்டன்), ராகினி(யாழ்ப்பாணம்), றோகினி(பாரிஸ்), சைலஜா(திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன்(லண்டன்), ஈஸ்வரன்(யாழ்ப்பாணம்), சிவானந்(பாரிஸ்), லிங்கேஸ்வரநாதன்(திருகோணமலை) ஆகியோரின் மாமியாரும்,
ஜெக்சன், ஜெக்சலா, கிரிஷன்(லண்டன்), சுகந்தன், தயாளன், ராஜீ(யாழ்ப்பாணம்), அட்சயா, அனுஸ்கா(பாரிஸ்), ருஷாந்தினி, கிரித்திகா(திருகோணமலை) ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.