மரண அறிவித்தல்
திரு மார்க்கண்டு அமிர்தலிங்கம்
Born 15/03/1954 - Death 02/12/2021 யாழ். பண்டத்தரிப்பு (Birth Place) வவுனியா, இத்தாலி Palermo (Lived Place)யாழ். பண்டத்தரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும், இத்தாலி Palermo வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு அமிர்தலிங்கம் அவர்கள் 02-12-2021 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நானு ஆசாரி, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகரன், சுதாகரன், கிருபாகரன், சுபாஸ்கரன், யரிகா ஆகியோரின் அன்பு தந்தையும்,
கலைவானி, சங்கீதா, கனிஸ்ரா, ஜீவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, தனலட்சுமி, சிவலிங்கம், காலஞ்சென்றவர்களான மாகலிங்கம், கனகாம்புசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், தர்மபுத்திரன் மற்றும் சிரோன்மணி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீனா, கஜானா, கஸ்மிதா, கிஷால், ஜெனிசன், ரித்திகா, கபிஸ், ஆதிஸ், ஆகாஸ், ஆருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணிற் பிறக்கும் கண்ணீர்
அனைத்தும் தீர்ந்தது
இதயத்தில்லிருந்த விளக்கும் அணைந்தது
வீடும் இருண்டது
காற்றும் நின்றது கனவுகள் கலைந்தது
மலை சாய்ந்தது! மன்றம் சரிந்தது
சாவும் இன்னொரு சரித்திரம் கொண்டது
அழுகின்றோம்..... அழுவோம்
அன்புடன் அழைக்க நீ இங்கில்லை
எதிர்காலம் இருளில் அமைந்ததே
வழியொன்றும் தெரியவில்லை
ஆற்றும் வழி தேடுகின்றோம்
ஆறவில்லை எம் இதயம்
உம் நினைவை விட்டு அகலவில்லை
என்றும் உங்கள் நினைவுகள் தொடரும்
என்றும் நீங்கா உங்கள் நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.
அன்பு அத்தான்....
எங்கள் அன்புக்கும் பாசத்துக்கும்
உரியவர் எங்கள் அத்தான்
எங்கள் வீட்டில் முதன்முதலில்
வந்தாரே எங்களின் தந்தை
போல் எங்கள் எல்லோர் மீதும்
பாசத்தை பல மடங்கு
பரிமாறிக்கொள்வார்.
நாங்கள் ஐந்து பெண்களும்
ஒரு ஆணும்
எங்கள் மீது ஒரு போதும்
அன்பைக் குறைத்தது இல்லை
எல்லோருடனும் ஒரே மாதிரி இருப்பார்
நாங்களும் அத்தானுடன்
அன்பாக இருப்போம்
அத்தான் எங்கள் வீட்டின்
பெரியவர் போல்
மதிக்கப்பட்டவர், விருப்பமானவர்
அத்தான் உங்களைப் பிரிவது சுலபமில்லை
உங்களை விரைவில் பிரிவோம்
என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை
என்றும் உங்கள் நினைவில் வாடும்
மைத்துனன், மைத்துனிமார்- றங்கன்,
சகுந்தலா, சாந்தா, விஜயா, ராசா, லீலா.
பார்வைக்கு
09/12/2021 02:00:pm - 06:00:pm
Haus der Trauer Bestattungen Melzner GmbH
Bahnhofstraße 291, 44579 Castrop-Rauxel, Germany
No Education Details
No Workplace Details