கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Laval ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகநேசன் சாரங்கன் அவர்கள் 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குகநேசன் வனிதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
தாரகா, ராதிகா, மகோத்கரன், பார்கவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணேசன், குணரட்னம், குகவதி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சைவசிகாமணி(ஓய்வுநிலை எழுது வினைஞர்), சைவ இறைமணி(ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற சைவக்கலைஞன், சிவகுமாரன்(தாதிய உத்தியோகத்தர்), திருமாலழகன்(ஆசிரியர்- வலம்புரி), அனுரா(கனடா), கெளசல்யா(ஆசிரியை), வியாசர்மணி, ஜீவிதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
குணசீலன்(ஜேர்மனி), மிகுந்தலால், லக்ஸ்மணசிறி(பொறியியலாளர்), யசோதை(தாதிய உத்தியோகத்தர்), ரமணன்(கமநல சேவைகள் நிலையம்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு:- Montreal, Canada அரசாங்க Covid சட்ட திட்டங்களுக்கு அமைய அன்னாரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும், சிரமங்களுக்கு வருந்துகிறோம்.