யாழ். நெடுந்தீவு மேற்கைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Breda வை
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மிளா பிரதீப் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 25-12-2021
அன்பின் திருவுருவாய்
அவதரித்த திருமகள் நீ
குடும்பத்தை அலங்கரித்த
பெருமகள் நீ
அன்பு மகளாய், ஆசை துணைவியாய்
உற்ற சகோதரியாய் இருந்து விட்டு
பாதியில் பரிதவிக்கவிட்டு சென்றதேனோ?
அழுகையும் கண்ணீரும்
எம்மை விட்டு நீங்கவில்லை
உன்னிடம் இருந்த பெற்ற
அன்பு இன்றும் குறையவில்லை
பூவுலகில் நீ வாழ்ந்த
காலம் குறைவெனிலும்
என்றும் எம்மில்
நீ பலகாலம் வாழ்வாய்
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உன் நினைவுடன் என்றும் வாழும்
கணவர், மகள், தாய், தந்தை, சகோதரன்
மற்றும் உற்றார் உறவினர்கள்.