யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கனடா Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சிவசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து வருடங்கள் கடந்தும்
பசுமரத்தாணியாய்
நித்தம் உங்களை
நினைத்து நாம் இருக்கின்றோம்
கனவிலும் நினைவிலும் - நாம்
காணுகின்ற நட்சத்திரத்திலும்
தினம் தினம் உங்களின்
பிரதிபலிப்புகள்.......
கோவில் தெய்வங்களாய்
கும்பிடும் சாமிகளாய்
பேசி எங்களுடன் - நீங்கள்
இருப்பதாய் உணர்கின்றோம்
உங்களை நினைக்கின்ற
ஒவ்வொரு கணங்களும்
உள்ளத்தில் பெருமிதம்
உணர்கின்ற நினைவுகள்
பொக்கிஷம்...
என்றென்றும் நீங்காத உங்கள் நினைவுகளோடு
மனைவி, மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை மற்றும் நண்பர்கள்.