யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இமெல்டா சூசைதாசன் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இம்மானுவேல்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பிலிப்ஸ் சூசைதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
எமில் சுஜீவன் அவர்களின் அன்புத் தாயாரும்,ஸ்டெபினி அவர்களின் அன்பு மாமியாரும்,
எவலின், சப்ரீனா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஸ்ரான்லி, ஆன்ஸ்லி, கிங்ஸ்லி, ஜடா, காலஞ்சென்ற லெஸ்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான டேவிட், ஜார்ஜ், அருட்தந்தை இமானுவேல், ஜேசூதாசன், கிறிஸ்தோபர், கிறேஸ், எல்சி, கலிஸ்டா, பெஞ்சமீன் மற்றும் மக்டலின், ஜான், ஜோசப் ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.